பயணிகளை மதிக்காமல் நடந்துகொண்ட தனியார் பேருந்து நடத்துநர் மற்றும் ஒட்டுநர் மீது வழக்குப்பதிவு

பயணிகளை தரக்குறைவாக நடத்தியாக தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது பயணி அளித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


கோவை: பயணிகளை தரக்குறைவாக நடத்தியாக தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது பயணி அளித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

கோவை - மேட்டுப்பாளையம் இடையே நாள்தோறும் பல ஆயிரம் பயணிகள் வேலைக்கு செல்ல தனியார் மற்றும் அரசு பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு செல்லும் பயணிகளிடையே தனியார் பேருந்து நடத்துநர்கள் மீதி சில்லறை தராமலும், தரக்குறைவான வார்த்தைகளாலும் பேசி வருவதாக அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

அதேபோல, ஒரு சம்பவம் தான் கடந்த சனிக்கிழமை மதியம் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் பேராசிரியர் எம். ஜெயக்குமாருக்கு நடந்துள்ளது. 

இது குறித்து அவர் கூறுகையில், "பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மேட்டுப்பாளையம் செல்வதற்காக தனியார் பேருந்தில் (SB_டிரான்ஸ்போர்ட் TN 66 F 5271) பயணித்தேன். பேருந்தில் மொத்தமாக 21 பேர் மட்டுமே பயணித்த நிலையில், யாருக்குமே மீதி பணத்தை தரவில்லை. நான் ரூ. 50 கொடுத்து இரண்டு டிக்கெட் பெற்றேன். ரூ. 26 கட்டணம். உடனே என்னிடம் ஒரு ரூபாய் சில்லறை கேட்டு பெற்ற நடத்துநர், மீதி தொகையான 25 ரூபாயை மூன்று முறை கேட்டும் அப்புறம் தர்றேன் எனக் கூறினார். ஆனால், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் வந்து சேரும் வரையில் தரவில்லை.

உடனே நான் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் நடத்துநரிடம் கேட்டேன். இத்தனை முறை மீதி தொகைக்காக கெஞ்சனுமா என்றதும், இருந்தா தான் குடுப்போம் என்றார். மற்ற பயணிகளும் சில்லறை வேண்டி கேட்ட போது வாய்த் தகராறு செய்த நடத்துநர் சேக்பரீத், தகாத வார்த்தைகளை பேசிக் கொண்டே இருந்தார். மேலும், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் SB பேருந்தின் ஓட்டுநர் சரவணக்குமார் அச்சில் ஏற்ற முடியாத தகாத வார்த்தைகளை பெண்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பேசினார்” என்றார்.

மேலும், இச்சம்பவம் குறித்து பயணி ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இதனிடையே, தனியார் பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், 40 நிமிடத்தில் கோவை முதல் மேட்டுப்பாளையம் வரை செல்ல வேண்டும் என இலக்கு வைத்து பேருந்து ஓட்டுநர்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் சூழலும் உள்ளது, இதன் காரணமாகவே, நடத்துநர்களும் அவர்களது கோபத்தை மக்களிடம் காட்டுகின்றனர். இதனை அதிகாரிகள் கவனத்தில் எடுத்துகொள்ள வேண்டும், என்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...