விவசாயிகளுக்குக் கடன் தேவையில்லை...! விளைபொருளுக்கான விலை நிர்ணயம் மட்டுமே தேவை..!

மத்திய அரசு அறிவித்துள்ள விவசாயிகளுக்கான 11 லட்சம் கோடி கடன் தேவையில்லை என்றும், விளைபொருளுக்கான விலை நிர்ணயம் தான் தேவை என உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: மத்திய அரசு அறிவித்துள்ள விவசாயிகளுக்கான 11 லட்சம் கோடி கடன் தேவையில்லை என்றும், விளைபொருளுக்கான விலை நிர்ணயம் தான் தேவை என உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து தெரிவித்துள்ளார். 



பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டையில் உழவர் உழைப்பாளர் கட்சியின் சார்பில் உழவர் தலைவர் நாராயணசாமி அய்யாவின் 94-வது பிறந்தநாள் விழா மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கட்சியின் கொடியினை ஏற்றி நாராயணசாமி அய்யாவின் திருவுருவப் படத்திற்கு கட்சியின் தலைவர் செல்லமுத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில், நடப்பு ஆண்டிலும் பருவமழை பொய்த்து வரலாறு காணாத வறட்சி நிலவுவதால் உடனடியாக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமும் பயிர் பாதுகாப்பு தொகையும் வழங்க வேண்டும், அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 150-ம், நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500-ம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,000-ம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும், திருப்பூர் மாவட்டத்தின் உயிர் நாடியான பி.ஏ.பி திட்டத்தில் ஆனைமலையாறு, நல்லாறு திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதனைத்தொடர்ந்து, பத்திரிக்கையாளர்களிடம் உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து பேசுகையில், விவசாயிகளுக்கான வருமானத்தை இரண்டு மடங்காகப் பெருக்குவோம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எப்படி பெருக்குவார்கள் என பார்த்தால் விவசாயிகளுக்குக் கடன் தொகையை அறிவித்துள்ளார்கள். இவர்கள் அறிவித்துள்ள ரூ. 11 லட்சம் கோடி கடன் என்பது மீண்டும் விவசாயிகளைக் கடனாளியாகத்தான் மாற்றும். எனவே, மத்திய அரசு அறிவித்துள்ள கடன் தேவையில்லை. விளை பொருளுக்கான விலையை நிர்ணயம் செய்தால் விவசாயிகள் அனைவரும் கடன் இல்லாமல் வாழலாம். இவ்வாறு கூறினார்.

இந்தச் செயற்குழு கூட்டத்தில் பொருளாளர் பாலசுப்பிரமணி, மாநில மகளிரனி தலைவி ராஜரீகா மற்றும் திருப்பூர், கோவை மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....