ஆண்டாள் விவகாரம்: உண்ணாவிரதத்தை தொடங்கினார் ஜீயர்

ஆண்டாள் குறித்து அவதூறாக பேசிய வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் சன்னதியின் சடகோப ராமானுஜ ஜீயர் இன்று (பிப்.,08) மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினார்.

ஆண்டாள் குறித்து அவதூறாக பேசிய வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் சன்னதியின் சடகோப ராமானுஜ ஜீயர் இன்று (பிப்.,08) மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினார்.

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து தவறாக பேசியதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. 'ஆண்டாள் சன்னதியில், வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று கூறி ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் சன்னதியின் ஜீயர், சடகோப ராமானுஜர் உண்ணாவிரதம் இருந்தார். முக்கிய பிரமுகர்கள் ஜீயருடன் பேச்சு நடத்தியதையடுத்து ஜீயர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். மேலும், வைரமுத்து வரும் பிப்.,03-ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க தவறினால் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் ஜீயர் கூறியிருந்தார்.

இந்நிலையில், வைரமுத்து தரப்பில் தற்போது வரை எந்த விளக்கமும் தராத காரணத்தால், அதனை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் சன்னதியின் ஜீயர், சடகோப ராமானுஜர் மீண்டும் உண்ணாவிரதத்தை துவக்கினார். இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அப்போது, ஜீயர் கூறுகையில், ஆண்டாள் தாயார் கூறும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் எனக்கூறினார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...