துணைவேந்தர் லஞ்ச விவகாரம்: போலீஸார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸார் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கோவை: பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸார் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பேராசிரியர் நியமனத்திற்கு 30 லட்சம் லஞ்சம் பெற்றதாக பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கடந்த 3-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக நேற்று லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சார்பாக ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி விடுப்பில் உள்ளதை அடுத்து, அந்த நீதிமன்றத்தில் பொறுப்பில் உள்ள தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, அவர் நீதிமன்றத்தில் சில கோரிக்கைகளை முன்வைத்தார் .ஊடகங்களில் செய்திகள் வருவதால் சிறையில் மூத்த குடிமகனுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கூட கிடைக்கவில்லை என்றும், சிறையில் முதல்வகுப்பு அறை கிடைக்கும் வரை சுடுநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதனை ஏற்ற நீதிபதி, அவரது கோரிக்கைகளை காவல்துறையினரிடம் தெரியப்படுத்தியதோடு காவலில் எடுத்து விசாரிப்பதற்காக தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். மேலும், துணை வேந்தருக்கு சிறையில் முதல்வகுப்பு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவும் அன்றைய தினமே விசாரிக்கப்படும் என்றார்.  பின்னர், பலத்த பாதுகாப்புடன் துணைவேந்தர் கணபதி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக, பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட துணைவேந்தர் கணபதி ஊடகங்களை பார்த்து, எழுதும் போது மனசாட்சியுடன் எழுதுங்கள், எதை வேண்டுமானாலும் எழுத வேண்டும் என எழுதாதீர்கள், மனித தன்மையுடன் எழுதுங்கள் என ஆவேசமாகப் பேசியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...