திருப்பூரில் ஜவுளி ஆராய்ச்சியாளர் சந்திப்பு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் மற்றும் நிப்ட்-டீ கல்லுாரியின் சார்பில் ஜவுளி ஆராய்ச்சியாளர் சந்திப்பு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி தொடங்கியது.

திருப்பூர்: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் மற்றும் நிப்ட்-டீ கல்லுாரியின் சார்பில் ஜவுளி ஆராய்ச்சியாளர் சந்திப்பு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி தொடங்கியது. 



அவினாசி - பழங்கரை சாலையில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் நடந்த இந்தக் கண்காட்சி அரங்கை தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை முதன்மை செயலர் பனீந்தர்ரெட்டி திறந்து வைத்தார். டெக்ஸ்டைல் கமிட்டி உறுப்பினர் செயலர் அஜித் சவான், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், இந்தியன் டெக்ஸ் பிரனர்ஸ் பெடரேஷன் கன்வீனர் பிரபுதாமோதரன், நிப்ட்- டீ கல்லுாரி தலைவர் முருகானந்தன் உள்பட தொழில் அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். 



கோவை சிட்ரா தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம், பிட்ரா மும்பை ஜவுளி ஆராய்ச்சி கழகம், நிட்ரா வட இந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம் உள்ளிட்ட ஆய்வு நிறுவனங்கள், மத்திய பட்டுவாரியம், கிரேஷிம், ரிலையன்ஸ், பி.எஸ்.ஜி.,ன் டெக்னிக்கல் டெக்ஸ்டைல் சிறப்பு மையம் என பல்வேறு அமைப்புகள் 26 அரங்குகளில் ஜவுளித்துறை சார்ந்த கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளன. 



மறுசுழற்சியில் தயாரிக்கப்பட்ட நுாலிழைகள், துணிகளின் மடியும் தன்மையை மிகநுட்பமாக ஆய்வு செய்யும் மெஷின், இயற்கை பொருட்களைக்கொண்ட தயாரிக்கப்பட்ட சாயங்கள், பட்டு நூலிழையில் தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டு ஆடை ரகங்கள், மருத்தவ ஜவுளி என புதுவகை ஜவுளிரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பின்னலாடை சேர்ந்த ஆராய்ச்சி மையங்களில் இருந்து ஆராய்ச்சியாளா்களை கொண்டு 2 நாள் தொழில் மேம்பாட்டைப் பற்றிய சிறப்பு கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.



Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...