திருப்பூரில் வெடிஉப்பு விற்பனை கடையில் பயங்கர தீவிபத்து

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வெடிஉப்பு விற்கப்படும் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை தீயணைப்புத் துறையினர் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வெடிஉப்பு விற்கப்படும் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை தீயணைப்புத் துறையினர் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



 

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்திருக்கிறது ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில். இக்கோயிலுக்கு சொந்தமான வணிக வளாகத்தில், பாறைகளுக்கு வெடி வைத்து தகர்க்க பயன்படுத்தும் உப்பு பொட்டிலங்களை விற்பனை செய்யும் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 70 வருடங்களாக செயல்பட்டு வரும் இந்த கடையில் இன்று மதியம் சுமார் 2 மணியளவில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. முதலில், பயங்கர வெடி சத்தத்துடன் பற்றத் துவங்கிய தீ, பின்னர் கொளுந்துவிட்டு எரிந்து கடை முழுவதையும் தீக்கிறையாக்கியது. பின்னர், அருகிலிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கடைக்குள் பொட்டாசியம் நைட்ரைடு மற்றும் பெரியம் நைட்ரைடு ஆகியவை இருந்ததால் தீகொளுந்து விட்டு எரிந்ததாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். இந்த தீ விபத்தின் மூலம் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், மாநகரின் மிக முக்கியப் பகுதியில் பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட இந்த தீ விபத்து, அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....