விடிவு காலம் பிறந்தது நொய்யல் ஆற்றுக்கு : பல ஆண்டுகளுக்கு பிறகு நொய்யலின் சுனை நீரை சுவைத்த கோவை மக்கள்..!

சிறுதுளி அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்களின் முயற்சியால், ​பல ஆண்டுகளுக்கு பின்னர் நொய்யல் ஆற்றில் இருந்து கிடைத்த சுனை நீரை கோவை மக்கள் சுவைத்து மகிழ்ந்தனர்.


கோவை : சிறுதுளி அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்களின் முயற்சியால், ​பல ஆண்டுகளுக்கு பின்னர் நொய்யல் ஆற்றில் இருந்து கிடைத்த சுனை நீரை கோவை மக்கள் சுவைத்து மகிழ்ந்தனர். 



உலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினத்தை அனுசரித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவையைச் சேர்ந்த் சிறுதுளி அமைப்பின் சார்பிலும் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது, நொய்யல் லைஃப் சென்டர் வளாகத்தில் 'நொய்யல் நதி' பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், சிறுதுளி அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் மணியன் மற்றும் சுரேஷ் இக்கருத்தரங்கில் சிறப்புரையாற்றினர்.

நொய்யல் நதியின் வரலாறு, முக்கியத்துவம், அதன் தற்போதைய நிலை போன்ற பல்வேறு கருத்துகளை மணியன் பகிர்ந்துகொண்டார். அவரைத்தொடர்ந்து, நீர் சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மை பற்றி சுரேஷ் விவரித்தார். இக்கருத்தரங்கில், RAF (Rapid Action Force) படையைச் சேர்ந்த 50 வீரர்களும், டெக்ஸ்சிட்டி கலை கல்லூரி மற்றும் காருண்யா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 100 மாணவ மாணவிகளும் கலந்துகொண்டனர்.



கருத்தரங்கின் நிறைவாக, நீர் சேமிப்பு குறித்த உறுதிமொழி அனைவராலும் எடுக்கப்பட்டது. இதனையடுத்து, கோவையில் உள்ள முக்கியமான பேருந்து சந்திப்புகளில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, Environment Foundation of India (EFI) மற்றும் சிறுதுளி சார்பில் நொய்யல் நதி பிறக்கும் இடத்திலிருந்து எடுக்கப்பட்ட சுத்தமான சுணை நீர் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. கோவையில் உள்ள பிரதான குளங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட மாசடைந்த நீர் மாதிரிகளும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. மேலும், குப்பைகளை முறையாகப் பிரித்து கொட்டுவது குறித்தும், நீர் நிலைகளை பாதுகாப்பது குறித்தும் தன்னார்வலர்கள் பொதுமக்களிடம் எடுத்துரைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



இதன் ஒருபகுதியாக, உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இன்று நீர்நிலைகளை காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சிறுதுளிசார்பில் வனத்துறை அனுமதியுடன் நொய்யலின் பல்வேறு சுனைகளிலிருந்து எடுக்கப்பட்ட சுனைநீர் கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் (காந்திபுரம் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம், டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகம், ரேஸ் கோர்ஸ், சிறுவர் பூங்கா, லட்சுமி மில்ஸ், ரயில் நிலையம், நீதிமன்ற வளாகம், ப்ரோஷான் மால்) சுமார் 200 தன்னார்வலர்களின் பங்களிப்போடு 20,000 பேருக்கு வழங்கப்பட்டது.

மேலும், இந்த நிகழ்வில் கோவை மாநகரில் இருக்கும் உக்கடம் குளம், வாலாங்குளம், குறிச்சி குளம், சிங்காநல்லூர் குளம் மற்றும் முத்தண்ணன் குளம் ஆகிய குளங்களில் இருக்கும் நீரினை காட்சிப்படுத்திடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....