மாமனாரை கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை

கோவையில் மாமனாரைக் குத்தி கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை : கோவையில் மாமனாரைக் குத்தி கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கோவை தாமுநகரை பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் பழனிசாமி(39).இவர் கோவை அம்மன்குளம் ஏரிமேடு பகுதியை சேர்ந்த செல்வராஜ்(75) மகள் மாரியம்மாளை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.இந்நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாட்டால் பழனிசாமி பிரிந்து சென்று விட்டார். அதனால் தன்னுடைய 2 மகள்களுடன் தாய் வீட்டுக்கு மாரியம்மாள் வந்துவிட்டார். பிறகு பழனிசாமி வேறு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டார். 

மேலும், தன்னுடைய மகள்கள் இருவரையும் பார்ப்பதற்காக ஏரிமேட்டில் உள்ள செல்வராஜ் வீட்டுக்கு பழனிசாமி அடிக்கடி வருவார். பேத்திகளைப் பார்க்க விடாமல் மாமனார் செல்வராஜ் தடுத்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

இந்நிலையில் கடந்த 22.08.16 தேதி அன்று, மகள்களைப் பார்ப்பதற்காக பழனிசாமி வந்தார். அவரை வீட்டினுள் அனுமதிக்காமலும், பேத்திகளை பார்க்க விடாமல் செல்வராஜ் தடுத்தார். இருவருக்கும் இடையே கைகலப்பானது. இதில், பழனிசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி மாமனார் செல்வராஜை கொலை செய்தார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கு கோவை 3வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நீதிபதி கார்த்திக்கேயன் முன்னிலையில் கொலை வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை இன்று நடந்தது. இதில், பழனிசாமி மீதான கொலைக்குற்றம் நிருப்பிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து கோவை மத்திய சிறையில் பழனிசாமி அடைக்கப்பட்டார். 

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...