கோவையில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்த மூவர் கைது : பொதுமக்கள் சாலை மறியல்

கோவை அம்மன் குளம் பகுதியில் அனுமதி இன்றி விநாயகர் சிலையை வைத்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்ததை கண்டித்து அவர்களது உறவினர்கள் இராமநாதபுரம் காவல் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை : கோவை அம்மன் குளம் பகுதியில் அனுமதி இன்றி விநாயகர் சிலையை வைத்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்ததை கண்டித்து அவர்களது உறவினர்கள் இராமநாதபுரம் காவல் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.



அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (32), இவர தனது நண்பர்களான பிரகாஷ் (34), பத்ரன் (28) ஆகிய இருவருடன் சேர்ந்து கிட்னி சென்டர் பகுதியில் உள்ள ஹவுசிங் யூனிட் அருகில் அனுமதி இன்றி விநாயகர் சிலையை வைத்தார். இதைத்தொடர்ந்து, தாசில்தார் அனுமதி இன்றி சிலை வைத்ததாகக் கூறி அதனை அகற்ற அப்பகுதி இளைஞர்களை வலியுறுத்தினார். ஆனால், சிலை வைத்த மூவரும் அதனை எடுக்க மறுத்தனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதி இளைஞர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 



இந்த நிலையில், தாசில்தார் இராமநாதபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிலை வைத்த மூவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய கோரி அவர்களது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இராமநாதபுரம் காவல் நிலையம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....