வேவு பார்க்கிறது பேஸ்புக்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஜெர்மனியைச் சேர்ந்த கிலிக்ஸ் (Cliqz) என்ற நிறுவனம் சமீபத்தில் பேஸ்புக் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் உலக அளவில் 30% இணையதளங்களை பேஸ்புக் நிறுவனம் வேவு பார்ப்பதாகவும், அந்த இணையதளங்களை பார்வையிடுபவர்களின் தகவல்களை முறைகேடாகப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த கிலிக்ஸ் (Cliqz) என்ற நிறுவனம் சமீபத்தில் பேஸ்புக் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் உலக அளவில் 30% இணையதளங்களை பேஸ்புக் நிறுவனம் வேவு பார்ப்பதாகவும், அந்த இணையதளங்களை பார்வையிடுபவர்களின் தகவல்களை முறைகேடாகப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் தகவல் திருடப்படுவதாக வந்த செய்தியை அடுத்து உலகம் முழுவதும் பேஸ்புக்-கிற்கு எதிராக குரல்கள் எழுந்துள்ளது. மேலும், #DeleteFacebook என்ற பெயரில் ஹேஸ்டேக் உலகம் முழுதும் பிரபலமாகியுள்ளது. இந்த சூழலில், அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.



ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தை நீக்கினாலும், அந்த அக்கவுண்ட்டை வைத்திருந்தவரையும் அவர் பயன்படுத்தும் இணையதளங்களையும் பேஸ்புக் ரகசியமாக வேவு பார்க்க முடியும் என்ற அதிரவைக்கும் தகவலை கிலிக்ஸ் நிறுவனத்தின் ஆய்வு முடிவு கூறுகிறது.

மேலும், பயனாளர்கள் பயன்படுத்தும் Ad Blocker எனும் செயலி பாதுகாப்பானவை அல்ல என்றும் அவையும் பயன்படுத்துபவரின் இணையம் பயன்பாடு குறித்த தகவல்களைத் திருடப்படுகின்றன என்பதையும் அந்த ஆய்வு உறுதி செய்துள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....