மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு உக்கடம் பாலம் வடிவமைக்கபடும்: கோவையில் முதலமைச்சர் பேச்சு

மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு உக்கடம் பாலம் வடிவமைக்கபடும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.

கோவை: மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு உக்கடம் பாலம் வடிவமைக்கபடும் என்று தமிழக  முதலமைச்சர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.

தொண்டாமுத்தூர் ராஜலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.130.46 கோடி மதிப்பில் பவானி கூட்டு குடிநீர் திட்டத்தையும் ரூ.215.51 கோடி மதிப்பிலான ஆத்துபாலம் முதல் உக்கடம் வரையிலான மேம்பால அடிக்கல் நாட்டு விழாவை தமிழக முதலமைச்சர் எடப்பாடி.பழனிச்சாமி தொடங்கி வைத்தார். மேலும், கோவையை சேர்ந்த 86 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். 

தொடர்ந்து அவர் பேசியதாவது :- 



ஜெ., பிறந்த நாள் விழா ஏழை எளிய மக்கள் பயன் பெறும் விழாவாக இருக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டிருந்தார். அதை நாங்கள் செய்து வருகிறோம். மதசார்பற்ற ஆட்சி செய்கிற ஒரே அரசு அ.தி.மு.க அரசு தான். அதற்கு உதாரணம் இன்று நடைபெற்ற இந்து, கிருஸ்துவ, 

முஸ்லிம் திருமணம். 



ஏர்போர்ட் போல மத்திய அரசுடன் இனைந்து பஸ் போர்ட் அமைக்கபடும். 

உக்கடம் மேம்பாலம் கட்டி முடிக்கபடும் போது போக்குவரத்து நெரிசல் குறையும். மக்களுக்கு உபயோகப்படும் வகையில் பாலம் வடிவமைக்கபடும். 

இவ்வாறு அவர் பேசினார். 

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், "ஒவ்வொரு ஆண்டும் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, உண்டியல் வைத்து பணம் வசூலிக்கும் தலைவர்கள் தமிழகத்தில் இருக்கின்றனர்.



ஆனால், அ.தி.மு.க. அரசு ஜெ., பிறந்தநாளை முன்னிட்டு ஏழை மக்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கிறது. இதை எங்கள் கடமையாக செய்து வருகிறோம்." என்றார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...