பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு வரும் ஜூன் மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு வரும் ஜூன் மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் வருமான வரித்துறை சார்பில் அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் பான் அட்டைப் பெறலாம். இந்த நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு மார்ச் 31-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்தக் காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழுமை பெறவில்லை. இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜுன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், உங்களுடைய வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியாது மட்டுமல்ல, அரசின் எந்த ஒரு சமூக நலன் சார்ந்த திட்டங்களின் பலன்களையும் பெற முடியாது.

இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைவதாக இருந்தது. இந்நிலையில், அதற்கான காலக்கெடு வரும் ஜூன் மாதம் 30-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...