குழந்தைகளுடன் பேசி மகிழும் கலைஞர் கருணாநிதி - வீடியோ

தி.மு.க தலைவர் கருணாநிதி குழந்தைகளுடன் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

சென்னை: தி.மு.க தலைவர் கருணாநிதி குழந்தைகளுடன் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழக அரசியலில் மூத்த தலைவரும், தி.மு.க தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மு.க.தமிழரசின் பேரன் மகிழன் உடன் கலைஞர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வெளியானது. அதனைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்திற்கு அவர் திடீர் விசிட் அடித்தார். இது அக்கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தியது.

இந்த நிலையில், கழக உறுப்பினர்களின் குழந்தைகளுடன் கலைஞர் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், "நான் யார்?" என்று குழந்தைகளிடம் கேட்கிறார் கருணாநிதி. அதற்கு குழந்தைகள், "கலைஞர் தாத்தா" என்று அன்புடன் கூறுகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...