காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண் தர்ணா..!

கோவை: கோவையில் பண மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ரூ. 1.5 லட்சம் பணத்தை பெற்று ஏமாற்றிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவையில் பண மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ரூ. 1.5 லட்சம் பணத்தை பெற்று ஏமாற்றிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சுமையா சையத். இவரிடம் ஒரு லட்சம் கொடுத்தால், இரட்டிப்பாகப் பணம் தருவதாகக் கூறி பெனாசிர் பானு என்பவர் ரூ. 7 லட்சம் பணம் பெற்றதாகத் தெரிகிறது. ஆனால், கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பெனாசிர் பானு மீது மீது நடவடிக்கை எடுக்கக் கோவை மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளர் கலையரசியை அணுகியுள்ளார். அப்போது, இந்தப் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க ஆய்வாளர் ரூ. 1.5 லட்சம் கையூட்டு பெற்றதாகவும், பணத்தை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் சுமையா சையத் கூறியுள்ளார். 

மேலும், தற்போது வழக்கை திரும்பப் பெறவில்லை எனில், விபச்சார வழக்கில் கைது செய்வோம் என மிரட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, மோசடி செய்தவர் மீதும், காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு வந்த பந்தயசாலை காவல் துறையினர் சமரசப்படுத்தியதை அடுத்து, சுமையா சையத் போராட்டத்தை கைவிட்டார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...