ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : செய்தி நிறுவனங்களைக் கண்டித்து கோவையில் போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெறும் போராட்டம் தொடர்பாக பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் முழுமையான செய்திகள் பதிவு செய்யப்படுவதில்லை என்று குற்றம்சாட்டி கோவையில் இன்று மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெறும் போராட்டம் தொடர்பாக பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் முழுமையான செய்திகள் பதிவு செய்யப்படுவதில்லை என்று குற்றம்சாட்டி கோவையில் இன்று மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு அம்மாவட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட மக்களின் போரட்டத்திற்கு ஆதரவாக கோவையில் இன்று மாணவர் அமைப்பைச் சேர்ந்த 10 பேர் போராட்டம் நடத்தினர். 

மேலும், தூத்துக்குடியில் நடைபெறும் போராட்டம் தொடர்பாக பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் முழுமையான செய்திகள் பதிவு செய்யப்படுவதில்லை என்று குற்றம்சாட்டிய அவர்கள் அவினாசி சாலையில் உள்ள தினத்தந்தி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், நடிகைகள் குறித்த செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக குற்றம்சாட்டிய அவர்கள் அவினாசி சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர். இந்த போராட்டத்தால் அவினாசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...