ரூ. 150 லஞ்சம் வாங்கிய மருத்துவமனை பணியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் உடற்தகுதி சான்றிதழ் வழங்க ரூ. 150 லஞ்சமாகப் பெற்ற ஊழியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் உடற்தகுதி சான்றிதழ் வழங்க ரூ. 150 லஞ்சமாகப் பெற்ற ஊழியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர், கோவை காந்திபுரம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு உடற்தகுதி சான்றிதழ் வேண்டி கோவை அரசு மருத்துவமனையில் விண்ணப்பித்துள்ளார். அங்கு, ரெக்கார்ட் கிளர்க்காக பணிபுரிந்து வந்த மணியன் என்பவர், சான்றிதழ் அளிக்க ரூ. 150 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க மனமில்லாத ரமேஷ், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். 

பின்னர், லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய நோட்டுகளை பெற்றுக் கொண்ட ரமேஷ், அதனை மணியனிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு பதுங்கிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், மணியனை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக மணியனுக்கு இரண்டாண்டு சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதம் விதித்து நீதிபதி ஜான் மினோ தீர்ப்பளித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...