'சமநீதி கிடைக்கும் வகையில் செயல்படும் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம்'

கோவை: அனைவருக்குமான சமநீதி கிடைத்திடும் வகையில் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் குலுவாடி ஜி.ரமேஷ் தெரிவித்துள்ளார்.


கோவை: அனைவருக்குமான சமநீதி கிடைத்திடும் வகையில் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் குலுவாடி ஜி.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் ஆனைகட்டி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில் சட்ட உதவி முகாம் இன்று நடைபெற்றது. இதில், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் குலுவாடி ஜி.ரமேஷ் கலந்து கொண்டு சட்ட சேவை வழங்கும் முகாமினையும், பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கினையும் தொடங்கி வைத்தார்.



தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "இந்தியாவில் சட்டத்தின் முன் எல்லோரும் சமம், அனைவருக்கும் சமநீதி கிடைக்கவும், சட்டப்பணிகள் ஆணையத்தின் நோக்கமானது, ஏழைகள், எழுத்தறிவு இல்லாதவர்கள் சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள இலவச சட்ட உதவி அளித்திடுவதுடன், கடைக்கோடி மக்களுக்கும் அவர்கள் பெற வேண்டிய நீதியை வாதாடிப் பெற்றுத்தருவதாகும்.



இம்முகாம் மலைவாழ் மக்களிடையே நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது. ஏனேனெனில் அரசின் திட்டங்களும், சட்டநுணுக்கங்கள் தொடர்பான விழிப்புணர்வு அதிகம் இல்லாதவர்கள் மலைவாழ் மக்கள். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகளை அமைத்து உள்ளது பாராட்டுதலுக்குரியது. இப்பகுதி மக்கள் இம்முகாமினை சிறப்பாக பயன்படுத்தி சட்டத் தெளிவு பெறுவதுடன், அரசின் திட்டம் தொடர்பான விழிப்புணர்வையும் பெறும்படி, கேட்டுக்கொள்கிறேன்." எனக் கூறினார்.



தொடர்ந்து, இம்முகாமில் வருவாய்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 9,07,000 -க்கான கசோலைகளை வழங்கினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...