காவிரி விவகாரம் : மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு

காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நாளை மறுநாள் (மார்ச் 31) நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நாளை மறுநாள் (மார்ச் 31) நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால், இதுவரை மேலாண்மை வாரியம் அமைக்கப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவில்லை. கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ம் தேதி நடைபெற இருக்கிறது. அதைக் கருத்தில்கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயங்குவதாக தமிழக அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனிடையே, மேலாண்மை வாரியம் அமைக்காமல், மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இன்றுடன் காலக்கெடு முடியும் நிலையில், எந்தவிதமான வாரியமோ அமைத்ததற்கான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உச்சநீதிமன்ற கெடு முடிந்து விட்டதால், அடுத்த கட்டமாக தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 

இந்த நிலையில், இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அ.தி.மு.க எம்பிக்கள் அருண்மொழி தேவன் , குமார் ஆகியோர் சந்தித்து பேசினர். பின்னர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மதுரை செல்வதால் அவரை தவிர்த்து மற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் தர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைத்துக்கட்சி கட்சி கூட்டத்தைக் கூட்டி ஒருமித்த கருத்தை எட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நாளை மறுநாள் (மார்ச் 31) நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...