கோவை மாநகராட்சியால் வைக்கப்பட்ட சீலை அகற்ற முயன்றவர்கள் கைது

கோவை : கோவையில் இடியும் நிலையிலுள்ள தனியார் வணிக வளாகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்த நிலையில் அதனை அகற்ற முயன்றவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை : கோவையில் இடியும் நிலையிலுள்ள தனியார் வணிக வளாகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்த நிலையில் அதனை அகற்ற முயன்றவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர். 

கோவை அரசு மருத்துவமனையின் பழைய பிணவறையை ஒட்டி தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் 8 பெரிய கடைகளும், 4 சிறிய கடைகளும் செயல்பட்டு வந்தன. இக்கட்டிடம் சேதமடைந்து இடியும் நிலையில் இருப்பதால் உயிர்ச்சேதம் ஏற்பட்டு விடாமல் இருக்க மாநகராட்சி அதிகாரிகள் கட்டிடத்திலுள்ள எட்டு பெரிய கடைகளுக்கு காலையில் சீல் வைத்தனர். மாநகாரட்சி அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக மூன்று உதவி ஆணையர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். 

இந்த நிலையில் மாலையில் கடை உரிமையாளர்கள் சிலர் சீலை உடைக்க முயன்றனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்த நிறுத்தி, சீலை உடைக்க முயன்ற பத்திற்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர். மேலும் அங்கு தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...