பிரிட்டனின் 4-வது தேசிய திரைப்பட விழாவில் 'மெர்சலுக்கு விருது'

கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் உருவாகி வெற்றியடைந்த மெர்சல் திரைப்படம் பிரிட்டனில் நடைபெற்ற தேசிய திரைப்பட விழாவில், சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான விருதைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது.

கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் உருவாகி வெற்றியடைந்த மெர்சல் திரைப்படம் பிரிட்டனில் நடைபெற்ற தேசிய திரைப்பட விழாவில், சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான விருதைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது.

விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் டீசர், ட்ரெய்லர் ஆகியவை உலக அளவில் சாதனை படைத்தன. அதேபோல, வசூலிலும் ரூ. 200 கோடியைத் தாண்டியது. அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பயங்கரமான வரவேற்பைப் பெற்றது.

ஜி.எஸ்.டி. வரி குறித்த வசனம், மருத்துவத் துறையில் நடக்கும் ஊழல் போன்ற பல வசனங்கள் இந்தப் படத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பிரிட்டன் தேசிய திரைப்பட விழாவில் 'மெர்சல்' சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நேற்று லண்டனில் நடைபெற்ற பிரிட்டனின் 4-வது தேசிய திரைப்பட விழாவில், 'மெர்சல்' திரைப்படத்துக்கு இந்த விருதை விழாக்குழுவினர் அறிவித்தனர். இந்த விருது முழுக்க முழுக்க ரசிகர்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் விருதாகும். இந்த வெற்றியை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்த விருது படக்குழுவினரை வெகுவாக மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.



Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...