கோவை விமான நிலையத்தில் பயணிகளை வரவேற்கும் ஆசிய யானைகள்

கோவை : கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை கவரும் வகையில் விமான நிலைய நிர்வாகம் ஆசிய யானைகளின் மாதிரிகளை நிறுவ முடிவு செய்துள்ளது.

கோவை : கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை கவரும் வகையில் விமான நிலைய நிர்வாகம் ஆசிய யானைகளின் மாதிரிகளை நிறுவ முடிவு செய்துள்ளது. 

நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கோவை விமான நிலையமும் ஒன்று. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் ஏராளமான பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, விமானப் பயணிகளை கவரும் வகையில் யானை, மான், காங்கேயம் காளைகள் மற்றும் பல்வேறு விலங்குகளின் மாதிரிகளை விமான நிலைய வளாகத்தில் கண்காட்சிக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, விமான நிலைய நிர்வாகத்தின் சார்பில் ரூ. 58 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

முதற்கட்டமாக, ஆண், பெண் மற்றும் இரு குட்டிகள் அடங்கிய யானை குடும்பத்தின் மாதிரிகள் கோவை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னும், அதனை நிறுவுவதற்கான இடம் தேர்வு செய்யப்படவில்லை.

இது தொடர்பாக விமான நிலைய முனைய மேலாளர் ஆர். மகாலிங்கம் சிம்ப்ளிசிட்டியிடம் கூறியதாவது:- இந்த விலங்குகளின் மாதிரிகள் தமிழகம் மற்றும் கோவையின் இயற்கை அழகை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது. காங்கேயம் காளைகள் மற்றும் தஞ்சாவூர் பொம்மைகள் நமது கலாச்சாரத்தின் அடையாளமாக உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையின் அழகைக் காண வரும் பயணிகளை கவரும் வகையில் இவைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...