பரோல் முடிந்து நாளை சிறை செல்கிறார் சசிகலா

பரோலில் வந்த சசிகலா நாளை மார்ச் 31-ம் தேதி மீண்டும் சிறைக்கு செல்கிறார்.

பரோலில் வந்த சசிகலா நாளை மார்ச் 31-ம் தேதி மீண்டும் சிறைக்கு செல்கிறார். 

சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 20ம் தேதி சென்னையில் காலமானார். இதையடுத்து கணவர் நடராஜன் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலா பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார். 

சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்ட சசிகலா தஞ்சாவூரில் மட்டுமே தங்கியிருக்கவேண்டும், சென்னைக்கு செல்லக்கூடாது என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில், அவரின் பரோல் காலம் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து, நாளை அவர் சாலை மார்க்கமாக மீண்டும் பெங்களூரூ செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...