கோவை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா

கோவை: கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் மருத்துவப் பிரிவு மற்றும் கருவிகள் அமைக்கும் நிகழ்ச்சியை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கோவை: கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் மருத்துவப் பிரிவு மற்றும் கருவிகள் அமைக்கும் நிகழ்ச்சியை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 



கோவை அரசு மருத்துவமனையில் ரூ. 5 கோடி மதிப்பில் ஆஞ்சியோ கிராம், அழகியல் துறை, செவிவழி பேச்சு பயிற்சி, கூடுதல் டயாலிசஸ் பிரிவு ஆகியவற்றிற்கு புதிய துறைகள் மற்றும் புதிய கருவிகள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, இதற்கான பணிகள் நிறைவடைந்த நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உள்ளாட்சித்துறை எஸ்.பி வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். 



ஆஞ்சியோ கிராம் துறையின் மூலம் இரத்தகுழாயின் அடைப்பைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். அதேபோல, புதிதாக அழகியல் துறையும் துவங்கப்பட்டுள்ளது. இந்த துறையின் மூலம் முகத்தில் உள்ள தழும்புகள் மற்றும் விபத்துகளால் ஏற்படும் தீக்காயங்களை குணப்படுத்தலாம். டயாலிசஸ் துறைக்கு 9 இயந்திரங்கள் உள்ள நிலையில், தற்போது கூடுதலாக 5 இயந்திரங்கள் வாங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...