தமிழக உரிமையை நிலைநாட்டவும், விவசாயகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் நடவடிக்கை: முதலமைச்சர்

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கும், விவசாய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கும், விவசாய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள 6 வார காலம் வரை காத்திருந்து, பின்னர் தகுந்த நடவடிக்கை எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், 17 நாட்கள் நாடாளுமன்றத்தை அ.தி.மு.க., எம்.பி.,க்கள் முடக்கினர். இருப்பினும், காவிரி வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்படவில்லை. இதனையடுத்து, மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், திட்டம் என்பதற்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்த மனுவானது, காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளுக்கு முரணானது. இந்த மனு விசாரணைக்கு வரும்போது, ஆரம்ப நிலையிலேயே மனு நிராகரிக்கும் வகையில் வாதாடுமாறு வழக்கறிஞர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் நமது உரிமைகளை நிலைநாட்டவும், விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு தொடர்ந்து மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...