கோவையில் 8-வது ரவுண்ட் டேபிளாக இணைக்கப்பட்டது 'ஸ்பார்க்'

கோவை: இந்தியாவில் பின்தங்கிய சமூகத்தினரின் நலனுக்காக செயல்பட்டு வரும் ரவுண்ட் டேபிள் இந்தியாவில், 'ஸ்பார்க்' என்ற பெயரில் மேலும் ஒரு ரவுண்ட் டேபிள் உருவாக்கப்பட்டுள்ளது.

கோவை: இந்தியாவில் பின்தங்கிய சமூகத்தினரின் நலனுக்காக செயல்பட்டு வரும் ரவுண்ட் டேபிள் இந்தியாவில், 'ஸ்பார்க்' என்ற பெயரில் மேலும் ஒரு ரவுண்ட் டேபிள் உருவாக்கப்பட்டுள்ளது.

இலாப நோக்கமற்ற அமைப்பாக செயல்பட்டு வரும் ரவுண்ட் டேபிள் அமைப்பில் ஏற்கனவே 7 டேபிள்கள் (அமைப்புகள்) உள்ளன. இவை ஒருங்கிணைந்து இந்தியாவில் பின்தங்கிய சமூகத்தினரின் நலன்களுக்காகப் பாடுபட்டு வருகின்றன. மேலும், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுடன் இணைந்து பின்தங்கிய மாணவர்களுக்கான உதவிகள், பள்ளிகளுக்கு இலவச கழிப்பறைகள் மற்றும் இயற்கை சீற்ற மீட்பு உள்ளிட்ட பல்வேறு சமூக நலன்களில் அக்கறை காட்டி வருகின்றன.



இந்த நிலையில், பாலக்காட்டைச் சேர்ந்த 'ரவுண்ட் டேபிள் 81' சார்பில் ஸ்பார்க் என்ற அமைப்பு, கோவையில் உள்ள ரவுண்ட் டேபிள் அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இது, கோவையில் சேர்க்கப்பட்ட 8-வது ரவுண்ட் டேபிள் ஆகும். இதன் தொடக்க நிகழ்ச்சியில், ரவுண்ட் டேபிள் இந்தியாவின் தேசிய உறுப்பினர்கள் மற்றும் திரைப்பட நடிகர் நரேன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், ஸ்பார்க்கின் தலைவராக பன்கஜ் கபூரும், செயலாளராக சுஜய் நிலையம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.



8-வது ரவுண்ட் டேபிளாக இணைக்கப்பட்டது 'ஸ்பார்க்', சிறுதுளி அமைப்புடன் இணைந்து மரம் நடுதல், குளங்கள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றையில் ஈடுபட உள்ளது. முதற்கட்டமாக, மரம் நடுவதற்கு மட்டும் ரூ. 8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பின்தங்கியவர்கள், ஆதரவற்றோர், தாய் அல்லது தந்தையை இழந்த பெண் குழந்தைகளின் மேம்பாடு ஆகியவற்றிற்கு ரூ. 4 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் சிகிச்சைக்காக ரூ. 35,000 ஆற்றல் அறக்கட்டளைக்கு ஸ்பார்க் நன்கொடையாக வழங்கியது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...