உதகை படகு இல்லத்தின் விபரமும்... படகு சவாரிக்கான கட்டணமும்....!

நீலகிரி: கோடை சீசனுக்காக தயாராகி வரும் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, உதகை படகு இல்லம் தொடர்பான ஒரு சில தகவல்கள்...


நீலகிரி: கோடை சீசனுக்காக தயாராகி வரும் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, உதகை படகு இல்லம் தொடர்பான ஒரு சில தகவல்கள்...



உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் இந்தப் படகு இல்லம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். சுற்றுலாத் துறைக்கு கீழ் இயங்கும் இந்தப் படகு இல்லமானது 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தப் படகு இல்லத்தில் படகு சவாரி மட்டுமின்றி குழந்தைகளுக்கான விளையாட்டு தளங்கள், மினி ரயில், குதிரை சவாரி என பல சிறப்பம்சங்களும் படகு இல்லத்தின் மறுகரையில் தேன் நிலவு படகு இல்லமும் உள்ளது.



நுழைவு கட்டண விவரம்: 

பொதுவாக - ரூ. 13, கேமரா: ரூ. 25, வீடியோ கேமரா: ரூ. 150 என வசூலிக்கப்படுகிறது.

வாகன கட்டண விவரம்: 

இருசக்கர வாகனம்: ரூ.10, நான்கு சக்கர வாகனம் ரூ.30, மற்ற வாகனங்களுக்கு ரூ.50-ம் வசூலிக்கப்படுகிறது.

படகுகளின் விபரம்:

மொத்தம் 133 படகுகளில் 33 இயந்திரப் படகுகளும், 9 துடுப்பு படகுகளும், 91 மிதிபடகுகளும் உள்ளன. மிதிபடகில் 40 மிதிபடகு இருவர் இருக்கையையும், 51 மிதிபடகு நால்வர் இருக்கையையும் கொண்டதாகும். இதில், உயிர் காக்கும் படகு, எந்த நேரமும் சுற்றுலா பயணிகளை காப்பதற்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கும். 



படகு சவாரிக்கான கட்டண விபரங்கள்:

மிதிபடகு:

  • மிதிபடகு இரண்டு இருக்கைகள் ரூ. 170, முன்வைப்பு தொகை ரூ. 170, மொத்தம் ரூ. 340.
  • மிதிபடகு நான்கு இருக்கைகள் ரூ. 260, முன் வைப்பு தொகை ரூ. 260, மொத்தம் ரூ. 520.








இயந்திர படகு:

  • இயந்திர படகு 8 இருக்கைகள் ரூ. 530, ஓட்டுனர் கட்டணம் ரூ. 40, மொத்தம் ரூ. 570.
  • இயந்திரபடகு 10 இருக்கைகள் ரூ. 660, ஓட்டுனர் கட்டணம் ரூ. 40, மொத்தம் ரூ. 700.
  • இயந்திரபடகு 15 இருக்கைகள் ரூ. 980, ஓட்டுனர் கட்டணம் ரூ. 40, மொத்தம் ரூ. 1,020.


துடுப்பு படகு:

  • துடுப்பு படகு 3 இருக்கைகள் : ரூ. 205, ஓட்டுனர் கட்டணம் : ரூ. 45, முன்வைப்பு தொகை : ரூ. 250, மொத்தம் : ரூ. 500.
  • துடுப்பு படகு 4 இருக்கைகள் : ரூ. 255, ஓட்டுனர் கட்டணம் : ரூ. 45, முன்வைப்பு தொகை ரூ. 300, மொத்தம் ரூ. 600.




இதில், துடுப்பு மற்றும் மிதிபடகு சவாரி மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் சவாரி முடிந்ததும் அடுத்த 30 நிமிடத்தில் முன்வைப்பு தொகையை திரும்பப் பெற அறிவுறுத்தப்படுகிறது. மேலும், சிறப்பம்சமாக குழந்தைகளை கவரும் வண்ணம் டாய் டிரெயின் இங்கு இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்கு, கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 25-ம், சிறியவர்களுக்கு ரூ. 12-ம் வசூலிக்கப்படுகிறது. 

இதற்கெல்லாம் மேலாகப் படகு இல்ல சுற்றுவட்டாரப் பகுதிகளில் படகு சவாரியின் போது செல்பி (சுயபுகை படம்) எடுக்கத் தடை, உயிர் காப்பான் (லைப் ஜாக்) அணியாமல் படகு சவாரி மேற்கொள்ள வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. விதிகளை மீறுபவர்களுக்கு உடனடி அபராதமும் விதிக்கப்படுவதாகப் படகு இல்ல நிர்வாகம் தெரிவிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது வாரத்தில் சுற்றுலா பயணிகளுக்கான படகு போட்டி மற்றும் படகு அலங்கார நிகழ்ச்சியும் நடத்தப்படுவது வழக்கம்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...