ஊட்டியில் 'ஐஸ் கட்டி' மழை

இன்று உதகை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமபுற பகுதிகளான கடநாடு, தாவெனெ, உல்லத்தி, கவரட்டி, அணிக்கொரை, தூனேரி, கெந்தோரை போன்ற பல்வேறு இடங்களில் (ஐஸ் கட்டி) ஆலங்கட்டி மழை பெய்தது.


நீலகிரி: ஊட்டியில் இன்று ஐஸ் கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து இதமான காலநிலை நிலவி வருகிறது. 

சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்திருக்கும் இந்த கோடை சீசனில் உதகையில் நிலவி வரும் கால நிலையால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இந்த நிலையில் இன்று உதகை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமபுற பகுதிகளான கடநாடு, தாவெனெ, உல்லத்தி, கவரட்டி, அணிக்கொரை, தூனேரி, கெந்தோரை போன்ற பல்வேறு இடங்களில் (ஐஸ் கட்டி) ஆலங்கட்டி மழை பெய்தது.



மேலும், குன்னுார் மற்றும் கோத்தகிரியிலும் இந்த ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், சாலைகளில் ஐஸ் கட்டிகள் பரவி கிடந்தன. பச்சை புல்வெளிகளில் விழுந்த ஐஸ் கட்டிகள் வெண்மை நிறமாக ஜொலித்த காட்சி காண்போரின் கண்களை கவர்ந்தது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...