கடனை ரத்து செய்ய வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்

திருப்பூர்: விசைத்தறி தொழிலுக்கு வாங்கிய வங்கிக் கடனை ரத்து செய்ய வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: விசைத்தறி தொழிலுக்கு வாங்கிய வங்கிக் கடனை ரத்து செய்ய வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், காரணம்பேட்டை, அவினாசி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனர். 

இந்நிலையில், ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்கும் கூலி விசைத்தறிகளை நஷ்டத்தை அடைய செய்துள்ளதாகவும், கூலி உயர்வை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் சரியான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் விசைத்தறியாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 



மேலும், அரசின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கைகளும் விசைத்தறி தொழிலை நலிந்து போக செய்ததாக விசைத்தறியாளர்கள் கூறுகின்றனர். இது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள் வங்கியில் பெற்ற கடனை ரத்து செய்ய வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...