காவிரி விவகாரம் : கோவையில் ஓட்டல்கள் நாளை ஸ்டிரைக்

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் நாளை (ஏப்.,03) ஓட்டல்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் நாளை (ஏப்.,03) ஓட்டல்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழக முழுவதும் எதிர்க்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும், நாளை (ஏப்.,03) முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு முழு கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி கோவையில் உள்ள அனைத்து ஓட்டல்கள் நாளை (செவ்வாய் கிழமை) காலை 5.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை திறக்கப்படாது என கோவை மாவட்ட ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் நாளை மருந்துக் கடைகள் அடைக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய மருந்துகளை இன்றே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...