கேரள பந்த் காரணமாக உக்கடத்தில் பேருந்துகள் நிறுத்தம் : பயணிகள் தவிப்பு

கேரளாவில் நடைபெற்று வரும் போராட்டத்தின் காரணமாக அம்மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் உக்கடம் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

கேரளாவில் நடைபெற்று வரும் போராட்டத்தின் காரணமாக அம்மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் உக்கடம் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 



நிரந்தரத் தொழிலாளர் சட்ட விதிமுறைகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. பாஜ.க, தொழிற்சங்கம் தவிர அனைத்து தொழிற்சங்கங்களும், 24 மணி நேர வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதையொட்டி, கேரளாவில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.



முழு அடைப்பு போராட்டத்தை ஒட்டி கேரளாவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முழு அடைப்பு காரணமாக, குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு செல்லும் தமிழக பேருந்துகள் அனைத்தும் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன. 



இதேபோல, கோவையிலிருந்து கேரள மாநிலம் பாலக்காடு, வேலந்தாவளம், அட்டபாடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லக்கூடிய அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், உக்கடம் பேருந்து நிலையம் வெறிச்சொடி காணப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.



மேலும், லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் அனைத்தும் கோவை மாவட்டம் மற்றும் கேரள எல்லையான வாழையார் சோதனை சாவடி அருகே நிறுத்தப்பட்டன. இதனால், அப்பகுதியில் போக்கவரத்து நெரிசலாகக் காணப்பட்டது. 



Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...