நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம் : போராட்ட களத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேச்சு

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஓயமாட்டோம் என்று கோவையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஓயமாட்டோம் என்று கோவையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 



காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளது. எனவே, தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு வரும் 9-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி.பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். 

கோவையில் காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் முன்பாக அ.தி.மு.க. சார்பில் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு செயல்திட்டங்கள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ஜுனன், ஆறுக்குட்டி, பி.ஆர்.ஜி.அருண்குமார், எட்டிமடை சண்முகம், சூலூர் கனகராஜ், ஓ.கே.சின்னராஜ், கஸ்தூரி வாசு, மற்றும் முன்னாள் மேயர் செ.ம.வேலுச்சாமி உட்பட அக்கட்சியைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். 

போராட்டத்தின் போது அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த போராட்டம் உணர்வுப் பூர்வமாகவும், எழுச்சிமிக்க போராட்டமாகவும் நடைபெற்று வருகிறது. உடனடியாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அதை அமைக்கும் வரை ஓய மாட்டோம். தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம். இத்தனை பிரச்சனைகளுக்கும் தி.மு.க தான் காரணம். அவர்கள் வானளாவிய அதிகாரத்தில் இருந்த போதும் மேலாண்மை வாரியம் அமைக்கப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது அரசியல் ஆதாயத்திற்காக போராடி வருகின்றனர். சாதனை படைக்கும் வகையில் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நடைபெறுகிறது. அடுத்த கட்ட முடிவுகள் குறித்து கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் முடிவு எடுப்பார்கள்." என்றார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...