காவிரி விவகாரம் : திருப்பூரில் கால்நடைத்துறை அமைச்சர் தலைமையில் உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை அமைக்கக் கோரி திருப்பூரில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் அ.தி.மு.க-வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்


திருப்பூர் : காவிரி மேலாண்மை அமைக்கக் கோரி திருப்பூரில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் அ.தி.மு.க-வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 



உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிந்தும், மத்திய அரசு  காவிரி மேலாண்மை அமைக்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.



அதன்படி, திருப்பூரில் ரயில் நிலையம் முன்பு தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை.கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். 



அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், "காவிரி பிரச்சினைக்காக மிகப்பெரிய சட்ட போராட்டம் நடத்தி உரிமையை நிலை நாட்டியவர் ஜெயலலிதா. அதேவழியில் நடைபெறும் இந்த ஆட்சியும் காவிரி உரிமையை மீட்டெடுக்கும். தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த போராட்டத்தால் மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை அமைக்கும்." என்றார். 



இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்து திருப்பூர் மாவட்டத்தில் 800 மருந்தகங்கள் அடைக்கப்பட்டுள்ளது இதனால் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...