கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலத்தை அளிக்க ஒப்புதல் தெரிவித்து கடிதம்

கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கம் செய்வதற்காக அரசுக்கு இடத்தை வழங்க ஒப்புதல் தெரிவித்து நில உரிமையாளர்கள், சிறப்பு துணை ஆட்சியரிடம் கடிதம் வழங்கினர்.

கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கம் செய்வதற்காக அரசுக்கு இடத்தை வழங்க ஒப்புதல் தெரிவித்து நில உரிமையாளர்கள், சிறப்பு துணை ஆட்சியரிடம் கடிதம் வழங்கினர்.

பீளமேட்டை அடுத்த சித்ராவில் உள்ள கோவை சர்வேதச விமான நிலையத்தில் பல சர்வதேச விமானங்கள் அதிக அளவு வந்து செல்லும் வகையில் கடந்த 2௦10-ம் ஆண்டு விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தன. இதன் காரணமாக விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய அருகில் உள்ள சின்னியம்பாளையம், நீலம்பூர், இருகூர் போன்ற பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன. அப்பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட இடங்களை அரசு எடுத்துக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆக்கிரமிக்கப்படும் பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 1,500-யும், விவசாய நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 900 -யும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. 

இதனிடையே, கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு இடத்தை வழங்க ஒருசில நில உரிமையாளர்கள் முன்வந்தனர். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு துணை ஆட்சியர் (நில ஆக்கிரமிப்பு) ராதாமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அரசு அறிவித்த தொகையை ஏற்றுக் கொண்டு, விமான நிலைய விரிவாக்கத்திற்கு இடத்தை வழங்க இருகூர் பஞ்சாயத்தில் உள்ள நில உரிமையாளர்கள் ஒப்புதல் கடிதம் வழங்கினர். 

இது குறித்து, சிறப்பு துணை ஆட்சியர் (நில ஆக்கிரமிப்பு) ராதாமணி கூறியதாவது:- விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலங்களை அளிக்குமாறு நில உரிமையாளர்களுக்கு எந்தவித நெருக்கடியும் கொடுக்கவில்லை. நிலத்தை உரிமையாளர்கள் தர முன்வரவில்லை எனில், நில ஆக்கிரமிப்பு சட்டத்தின் மூலம் சட்டப்படி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்படும். 18-வது பிளாக்கில் இருக்கும் குடியிருப்புவாகிளுக்கு இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தோம். அதில், அவர்கள் தங்களது ஒப்புதல் கடிதத்தை வழங்கினர். இவ்வாறு கூறினார். 

ஆனால், விரிவாக்கப் பணிக்காக எடுத்துக்கொள்ளும் இடங்களுக்கு சந்தை மதிப்புப்படி நிவாரண தொகை அளிக்கவேண்டும் எனக் கூறி வருவதால், கோவை சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது தொடர்ந்து தாமதமாகி வருகிறது. 

இது தொடர்பாக சின்னியம்பாளையம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சி.ஆர். சுப்ரமணியன் பேசுகையில், "பொதுத்துறை அதிகாரிகளால் அரசுக்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், தற்போதைய சந்தை மதிப்பிலான விலையைக் கொடுக்க அரசு முன்வர வேண்டும். நிலத்தின் உரிமையாளர்களுக்கு பணத்தை தவிர்த்து, ஒரு உணர்வு உள்ளது. அதனை அரசால் ஈடுசெய்ய முடியாது," என்றார். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...