கோவை, திருப்பூர் நீலகிரியில் அ.தி.மு.க தொண்டர்கள் உண்ணாவிரதம்

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. 

காலை 8 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த போராட்டத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். 



கோவை காந்திபுரம் பகுதியில் அமைச்சர் வேலுமணி தலைமையில் இன்று காலை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 



திருப்பூரில் ரயில் நிலையம் முன்பு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் கூடிய அ.தி.மு.க தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். 



நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சி. திடலில் அ.தி.மு.க. சார்பில் இன்று நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர், எம்.பி. கே.ஆர்.அர்ஜூணன் தலைமை தாங்கினார். 



இதுமட்டுமல்லாது தி.மு.க வினர் பல்வேறு இடங்களில் சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை விமான நிலையத்தின் முன்பு கூடிய தி.மு.க வினர் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.



இதே போல், பெரியநாயக்கன்பாளையத்தில் தி.மு.க வினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சி.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர்.



வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையைக் கண்டித்து முழு கடையடைப்பு நடத்தப்பட்டது. இதனால் அங்குள்ள மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...