காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி கோவை வழக்கறிஞர்கள் சார்பில் போராட்டம்

கோவை: காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராகவும் கோவை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஊர்வலம் மற்றும் போராட்டம் நடைபெற்றது.

கோவை: காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராகவும் கோவை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஊர்வலம் மற்றும் போராட்டம் நடைபெற்றது. 



தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல, ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வேண்டும், நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் போராட்டங்களில் முழக்கங்களாக எழுந்துள்ளது. இதன் ஒருபகுதியாக, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் வெளியே, வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும், நியூட்ரினோ திட்டத்தை கைவிட மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் போராட்டத்தின் போது அவர்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தை சுற்றி ஊர்வலமாகச் சென்று, பின்னர் மீண்டும் நீதிமன்றத்திற்குள் சென்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...