கோவையில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம்

கோவை: கோவையில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் நண்பர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் இன்று ராமநாதபுரம் காவல் நிலைய கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.

கோவை: கோவையில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் நண்பர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் இன்று ராமநாதபுரம் காவல் நிலைய கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு, காவல் ஆய்வாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசுகையில், "இன்று புதிதாக இணைந்துள்ள பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் நண்பர்கள் தினமும் ஐந்து பேர் வீதம் காவல் நிலையத்திற்கு வருகை தந்து காவலர்களோடு இணைந்து இரவு ரோந்து பணியாற்ற வேண்டும். நீங்கள் குடியிருக்கும் பகுதியில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெற்றாலும் காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும்.

 

நீங்கள் வசித்து வரும் பகுதியில் உள்ள ஒவ்வொரு நபரைப் பற்றிய அடிப்படை விவரங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்கள் பகுதியில் நடைபெறும் அனைத்து பொது விழாக்களிலும் காவலர்களோடு இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும். உங்கள் பகுதியிலுள்ள போக்குவரத்து சிக்னல்களில் காலை, மாலை நேரங்களில் காவலர்களுடன் இணைந்து போக்குவரத்தை சரிசெய்ய உதவி செய்ய வேண்டும். உங்கள் பகுதியிலுள்ள இளைஞர்கள், பொதுமக்களை பிரண்ட்ஸ் ஆஃப் போலீசில் இணைக்க வேண்டும்" என்றார். 

இந்த நிகழ்ச்சியில் 35 பேர் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசில் புதிதாக இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...