ஸ்டெர்லைட் விவகாரம் : உச்ச நீதிமன்ற உத்தரவின் நகலை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு அடிப்படையான உச்ச நீதிமன்ற உத்தரவின் நகலை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை: ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு அடிப்படையான உச்ச நீதிமன்ற உத்தரவின் நகலை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பின் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: " தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுக் காற்றால் இப்பகுதியில் வசிப்பவர்கள் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் 1996-ம் ஆண்டிலிருந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். நீதிமன்றங்களில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய சிப்காட் நிறுவனம் மூலம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இப்போராட்டத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆதரவு அளித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எம்ஜிஆர் திடலில் வரும் ஏப்ரல் 8-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி காவல் துறையில் மனு அளித்தோம். ஆனால், பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து தூத்துக்குடி காவல் உதவி ஆணையர் கடந்த 30-ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.

இது சட்டவிரோதம். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திவரும் பொதுமக்களுக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடத்துவது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். இதனால் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுத்து தூத்துக்குடி காவல் உதவி ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, தூத்துக்குடி எம்ஜிஆர் திடலில் ஏப்ரல் 8-ல் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியும், பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும்”.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலை இயங்கிவருவதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை இயங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகலை புதன்கிழமை அன்று தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...