வாக்குச்சாவடி நிலை மதிப்பு ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து அரசு ஆசிரியர்கள் போராட்டம்

திருப்பூர் : திருப்பூரில் கடந்த தேர்தலின் போது வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணிசெய்தவர்களுக்கு இதுவரை மதிப்பு ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் அரசு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : திருப்பூரில் கடந்த தேர்தலின் போது வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணிசெய்தவர்களுக்கு இதுவரை மதிப்பு ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் அரசு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கடந்த தேர்தலின் போது திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு 230 பேர் வாக்குச்சாவடி நிலை அலுவலராகப் பணி அமர்த்தப்பட்டனர். நிலை அலுவலராகப் பணி அமர்த்தப்பட்டவர்களுக்கு 7 ஆயிரத்து 150 மதிப்பு ஊதியம் வழங்கப்படும் என்றும் தேர்தல் பணி செய்ய வேண்டும் என்றும் கூறியதை தொடர்ந்து அரசுப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் பணியாற்றி உள்ளனர். 

இந்நிலையில், பணியாற்றிய 230 பேர்களில் 211 பேருக்கு மட்டும் அவர்களது சொந்த வங்கிக்கணக்குகளில் பணத்தை செலுத்திவிட்டு மீதமுள்ள 19 பேருக்கு இதுவரை ஊதிய பணத்தை தராமலும் 19 பேர்களின் பணத்தை அதிகாரிகள் கையாடல் செய்ததாக கூறி, தேர்தல் பணியாற்றிய 19 பேர் திருப்பூர் மாநகராட்சியில் உள்ள தேர்தல் பிரிவு தாசில்தார்  ராமலக்ஷ்மணனின் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பணியாற்றிய ஆசிரியர்கள் கூறுகையில், "19 பேரின் பணத்தை அதிகாரிகள் கையாடல் செய்து விட்டதாகவும், அதிகாரிகளை வந்து கேட்டால் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுவதாகவும் தங்களுக்கு சேரவேண்டிய தொகையை பெறாமல் வெளியில் செல்லமாட்டோம்", என்று கூறினர். ஆசிரியர்கள் திடீர் காத்திருப்பு போராட்டத்தினால் மாநகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...