கோவையில் வீட்டிற்குள் லாரி புகுந்த விபத்தில் பெண் பலி

கோவை: கோவையில் வீட்டிற்குள் லாரி புகுந்த விபத்தில் தூங்கிக்கொண்டிருந்த பெண் பரிதாபமாக பலியானார்.


கோவை: கோவையில் வீட்டிற்குள் லாரி புகுந்த விபத்தில் தூங்கிக்கொண்டிருந்த பெண் பரிதாபமாக பலியானார். 



சுங்கம் பைப்பாஸ் சாலையை சேர்ந்தவர் மரியதாஸ்(51). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி விக்டோரியா. இன்று அதிகாலை இவர்கள் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த போது அப்பகுதியில் ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி நிலை தடுமாறி மரியதாசின் வீட்டிற்குள் புகுந்தது. இதில் வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் விக்டோரியா பரிதாபமாக பலியானார். மரியதாஸ் படுகாயமடைந்தார்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் விக்டோரியாவின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மரியதாசை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



இந்த விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் விக்னேஷ் என்பவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், அடிக்கடி சுங்கம் பைபாஸ் சாலையில் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாகவும், எனவே சாலையின் ஓரத்தில் பாதுகாப்பு சுவர் அமைத்துத் தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...