காவிரி விவகாரத்தில் அ.தி.மு.க., போலி உண்ணாவிரதம் : கமல் சாடல்

காவிரி விவகாரத்தில் போலி உண்ணாவிரதம் இருந்து தனது இயலாமையை தமிழக அரசு மறைக்க முடியாது என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் கூறியுள்ளார்

காவிரி விவகாரத்தில் போலி உண்ணாவிரதம் இருந்து தனது இயலாமையை தமிழக அரசு மறைக்க முடியாது என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் கூறியுள்ளார்.

மதுரை பொதுக்கூட்டத்தில் உதயமான மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை திருச்சியில் நடத்துவதாக அதன் நிறுவனர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அதன்படி, திருச்சி பொன்மலை ஜி கார்னர் சுப்பிரமணியபுரத்தில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடை தயார் செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சியிலிருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கட்சியின் உயர்நிலைக்குழு உறுப்பினர்களுடன் திருச்சிக்கு நேற்று மாலை கமல்ஹாசன் வருகை தந்தார். இந்தக் கூட்டத்தில், காவிரி விவகாரம், கட்சியின் கொள்கை, தேர்தல் கூட்டணி ஆகியவற்றை விரிவாக அறிவிக்கவுள்ளார். 

இந்த நிலையில், திருச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மக்கள் நீதி மய்யம் பிப்.,22 அன்றே திருச்சி பொதுக்கூட்டம் பற்றி அறிவித்திருந்தது. உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என நம்பிக்கையுடன் இருந்தோம் நாங்கள். ஆனால், ஏற்கனவே 2016-ல் நிகழ்ந்த நிகழ்வுகள் ஞாபகம் வருகின்றன. அப்போது, 4 வாரத்திற்குள் மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அப்போதும், நுணுக்கங்களை தயாரித்து சாக்குபோக்கு சொல்லி தாமதிக்கப்பட்டது. இப்போதும் அதே நாடகம் அரங்கேறுகிறது. 

காவிரி வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை. ஆனால், தமிழக அரசு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோ, போலியான ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தோ தனது இயலாமையை மறைக்க முடியாது. மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்காமல் மத்திய அரசின் எடுபிடி போல் நடக்கிறது தமிழக அரசு. இந்த நிகழ்வுகளினால் எங்கள் பொதுக்கூட்டம் இன்று காவிரி பிரச்சினை குறித்து முக்கியமாக விவாதிக்கும். பிரச்சினைகள் மட்டும் பேசாமல் தீர்வுகளுக்கான வழிகளையும் முன்னிறுத்தும். இதுவரை நடந்த எங்களின் ஆய்வுபடி முக்கிய துறைகளில் மையத்தின் கொள்கைகளுக்கான கோட்பாடு அறிவிக்கப்படும். இதனை மையமாக வைத்து அடுத்த 5 மாதங்களில் எங்களின் முழு கொள்கைகளும் தயாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...