பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மையங்கள் மூட தீர்மானம்

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து தொலைதூர கல்விமையங்களும் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி கொள்ள சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து தொலைதூர கல்விமையங்களும் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி கொள்ள சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோவை மருதமலை அருகே உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் கடந்த சில தினங்களாகவே சர்ச்சையில் சிக்கி பரபரப்பாக காணப்படுகிறது. போராசிரியர்கள் நியமனத்தில் லஞ்சம் வாங்கப்பட்டதாக கூறி பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி கடந்த பிப்ரவரி மாதம் 3-ம் தேதி கைது செய்யப்பட்டார். அதன் பின் மார்ச் மாதம் ஜாமினில் வெளிவந்தார். 

அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிண்டிகேட் என்கிற பல்கலைக்கழக ஆட்சிக் குழு மாற்றியமைக்கப்பட்டது. இதனிடையே அக்குழுவின் கூட்டம் தமிழ்நாடு உயர்கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவால் தலைமையில் மார்ச் 26-ம் தேதி நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பல்கலைக்கழக நலன் கருதி பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் தொலைதூரக் கல்வி மையங்கள் மூட இருப்பதும், வரும் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கையில் ஈடுபடக்கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் குறித்து தமிழ்நாடு சுயநிதியல் கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தை சேர்ந்த மூத்த நீர்வாகி ஒருவர் கூறுகையில், "தொலைதூர கல்வி மையங்கள் என்ற பேரில் தனியார் இன்ஸ்டிட்யூட்கள் பல முறைகேடுகளில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு வகுப்பறையில்லாமலும், சரியான எந்த லேப் வசதிகளும் இல்லாமலும், ஆசிரியர்களும் இல்லாமலும் பெயரளவில் இயங்கி வந்தன. இதனால் மாணவர்களின் எதிர்காலம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இது குறித்து எங்கள் சங்கம் மூலம் பல முறை முறையிட்டும் எந்த பயனும் இல்லை. தற்போது இந்த தீர்மானத்தின் மூலம் இதற்கு தீர்வு கிடைத்துள்ளது. இதை தனியார் கல்லூரியின் ஒர் முதல்வராக மாணவர்களின் நலன் கருதி வரவேற்கிறேன். இந்த தீர்மானத்தின் மூலம் மாணவர்களின் கல்வி தரம் உயரும். மாணவர்கள் சரியான சூழ்நிலையில் எல்ல வசதிகளுடன் படித்து வெளியில் வரும் அவர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்." என்றார்.

இது குறித்து வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மார்ச் மாதம் 30-ம் தேதி தமிழ்நாடு சுயநிதியல் கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...