அரசுப் பொருட்காட்சியில் அரசின் திட்டங்களை விளக்கும் அரங்குகளை அமைக்க உத்தரவு

கோவை : அரசுப் பொருட்காட்சியில் அரசின் திட்டங்களை பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் கண்கவர் அரங்குகளாக அனைத்து அரசுத்துறைகள் சார்பில் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.

கோவை : அரசுப் பொருட்காட்சியில் அரசின் திட்டங்களை பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் கண்கவர் அரங்குகளாக அனைத்து அரசுத்துறைகள் சார்பில் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார். 



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 'அரசுப் பொருட்சாட்சி-2018' நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமையில் அனைத்து அரசு துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது :- தமிழ்நாடு அரசின் சார்பில் கோவை மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசுப்பொருட்காட்சி செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு ஏப்ரல் 15 -ம் தேதி துவங்கப்படும் இப்பொருட்காட்சியானது தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இப்பொருட்காட்சியில், அரசின் 27 அரசுத் துறைகளுக்கு தங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்துப் பயன்பெறும் வண்ணம் அரங்குகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், கோவை மாநகராட்சி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கிராம கைத்தொழில் வாரியம், கோ-ஆப்டெக்ஸ், ஆவின், தாட்கோ, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு உப்பு நிறுவனம், தமிழ்நாடு சிமெண்ட் கார்பரேசன் லிட், தமிழ்நாடு எரிசக்தி முகமை, ஆகிய 12 அரசு சார்பு நிறுவனங்களுக்கும் இப்பொருட்காட்சியில் பங்கேற்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

இத்துறைகள் அனைத்து அரசு துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும், தங்கள் துறையால் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்களைக் காட்சிப்படுத்தும் வகையிலும் கண்கவர் அரங்குகளாகவும், காண்போரை ஈர்க்கும் வகையிலும் அமைக்க வேண்டும். எனவே, கோவை மாவட்டம் சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடைபெறும் அரசுபொருட்காட்சியில் தமிழ்நாடு அரசின் திட்டங்களை அறிந்துகொள்வது மட்டுமின்றி கோடை காலத்தை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய பல்வேறு விளையாட்டு சாதனங்களும், வீட்டு உபயோகப்பொருட்களும், பல்வேறு விற்பனை அரங்குகளும் அமைக்கப்படவுள்ளது. 

எனவே, இந்த அரிய வாய்ப்பைப் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு பொதுமக்களும் வருகைபுரிந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, இவ்வாறு கூறினார். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...