மத்திய அரசின் முதுகுக்கு பின்னால் தமிழக அரசு - கமல்

'மத்திய அரசும், மத்திய அரசின் முதுகுக்கு பின்னால் இருக்கும் மாநில அரசும் நீருக்காக கெஞ்ச வைத்து விட்டார்கள்' என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் குற்றம் சாட்டியுள்ளார்.

'மத்திய அரசும், மத்திய அரசின் முதுகுக்கு பின்னால் இருக்கும் மாநில அரசும் நீருக்காக கெஞ்ச வைத்து விட்டார்கள்' என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் குற்றம் சாட்டியுள்ளார். 

மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், ‘காவிரி மேலாண்மை வாரியத்தில் மத்திய அரசு செய்து வருவது தவறு. காவிரி பிரச்னையில் நூற்றாண்டுகளாக தமிழக உரிமை பறிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே ஆக வேண்டும். 

காவிரி மேலாண்மை அமைக்காவிட்டால், தமிழகம் அமைதியாக ஒத்துழைக்க மறுக்கும். அரசியல் சூழ்ச்சி வேண்டாம், நேர் கொள்வோம், எதிர்கொள்வோம். காவிரி பிரச்சனையில் தீர்வை நோக்கி மக்கள் நீதி மய்யம் செல்கிறது. 

இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுக்க வேண்டும் என்பது எனது கனவு. எங்களுக்கு உண்ணாவிரத்தத்தில் நம்பிக்கையில்லை, உண்ணுவதில்தான் நம்பிக்கையுள்ளது. மத்திய அரசின் முதுகுக்கு பின்னால் இருக்கும் மாநில அரசு, நீருக்காக கெஞ்ச வைத்து விட்டார்கள். 

உறங்குபவர்களை தட்டி எழுப்பிவிடலாம், உறங்குவது போல் நடிப்பவர்களை ஒன்றுமே செய்ய முடியாது. நாங்கள் செயல்பட தொடங்கும்போது மக்கள் ஏமாற மாட்டார்கள். சேர வேண்டிய நேரத்தில் சேர வேண்டியவர்களுடன் சேருவோம்’ என்றார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...