கோவை மாணவர்கள் தயாரிக்கும் குறும்படத்தில் நடிக்கிறார் காவல் துறை துணை ஆணையர்

கோவை: இந்தியாவில் குடிபோதையில் வாகனம் ஓட்டி அதனால் ஏற்படும் விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த விபத்துகளைத் தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது. மது குடித்து வாகனம் ஓட்டுவதை சட்டங்களால் தடுப்பதை விட விழிப்புணர்வுகள் மூலம் தடுத்தால் சிறந்தது என ஆய்வுகள் கூறுகிறது.

கோவை: இந்தியாவில் குடிபோதையில் வாகனம் ஓட்டி அதனால் ஏற்படும் விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த விபத்துகளைத் தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது. மது குடித்து வாகனம் ஓட்டுவதை சட்டங்களால் தடுப்பதை விட விழிப்புணர்வுகள் மூலம் தடுத்தால் சிறந்தது என ஆய்வுகள் கூறுகிறது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவே உச்சநீதிமன்றம் நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளை அகற்ற அறிவுறுத்தியது. அதன் பின்னர் மாநில அரசு தீவிரமாக மது கடைகளை மூடியது. ஆனால் மூடிய கடைகளும் மெல்ல மெல்ல திறக்கப்பட்டது. பின்னர் வழக்கம் போல மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதும் அதிகரித்து விட்டது.

ஆகவே, மதுகுடித்து வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்த கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த குறும்படத்தில் கோவை மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார் தனது பங்களிப்பை செலுத்தியுள்ளார்.

இந்த விழிப்புணர்வுகளில் தனது பங்களிப்புக்கான ஆர்வத்தையும் மாணவர்களிடம் தெரிவித்துள்ளார்.

'மது 42.8' என்ற இந்த படம் வரும் 10-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த படத்தில் மது குடித்து வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் தீங்குகள் குறித்த விளக்கங்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து துணை ஆணையர் சுஜித் குமார் கூறுகையில், " மது குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுவதால், உயிர் இழப்புகள் அதிகம் ஏற்படுகின்றது. எனவே, அந்தப் பிரச்சினையை முதலில் ஆராய வேண்டும். விபத்துகளுக்கு மூலகாரணம் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது. இதை கட்டுப்படுத்த விழிப்புணர்வுகள் அவசியம். ஆகவே இந்த குறும்படத்தில் எனது பங்களிப்பை செலுத்துகிறேன். இந்த குறும்படத்தில் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் இழப்புகள் தனி நபர் சார்ந்ததல்ல 

என்று குடும்பங்களின் இழப்பின் ஆழத்தை அறிவுரையாக சொல்லியுள்ளேன். விபத்துகளின் புலனாய்வுகள் குறித்தும் விளக்கியுள்ளேன். இது போன்ற விழிப்புணர்வில் கலந்து கொள்வது மகிழ்ச்சியை தருகிறது." என்றார்.

இது குறித்து குறும்படத் தயாரிப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கனகராஜ் கூறுகையில், "அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சமூக விழிப்புணர்வுக்காக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தங்கள் பங்களிப்பைச் செலுத்தி வருகின்றனர். இந்த முறை 'மது 42.8' என்ற பெயரில் குறும்படம் இயக்கியுள்ளனர். இதில் போக்குவரத்து துணை ஆணையாளர் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) கிறிஸ்டோபர் ஆகியோர், சட்டங்கள் மற்றும் தீர்வுகள் புலனாய்வு குறித்த விளக்கங்களைத் தருகின்றனர். இந்த விழிப்புணர்வுகள் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் இளைஞர்களை சரி செய்யும்." என்றார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...