கோவையில் 30 இடங்களில் போராட்டம்: பெண்கள் உட்பட 2,363 பேர் கைது

கோவை: காவிரி விவகாரம் தொடர்பாக கோவையில் போராட்டம் நடத்திய 245 பெண்கள் உட்பட 2,363 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: காவிரி விவகாரம் தொடர்பாக கோவையில் போராட்டம் நடத்திய 245 பெண்கள் உட்பட 2,363 பேரை போலீசார் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், முழுமையான பந்த் நடைபெற்று வருகிறது.

கர்நாடகா தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதாக தமிழகம் முழுதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மத்திய அரசைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

கோவை:

கோவையைப் பொறுத்தவரையில், பிற்பகல் 12 மணி நிலவரப்படி 30 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 245 பெண்கள் உட்பட 2363 கைது செய்யப்பட்டுள்ளனர். நேரு நகர், சரவணம்பட்டி போன்ற பகுதியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது கல் வீசப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



கோவை மாநகர் முழுவதும் 1200 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் காவல் நிலைய போலிசார் உட்பட தமிழ்நாடு சிறப்பு காவலர்கள் 150 பேரும், ஆயுதப்படை காவலர்கள் 225 பேரும், ஊர்காவல் படையை சேர்ந்தவர்கள் 175 பேரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

90 சதவீத கடைகள் மூடியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போராட்டங்கள் நடக்கும் பகுதியை தவிர முக்கிய சாலைகள் வெறிச்சோடியே காணப்படுகிறது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...