மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை

சட்டவிரோதமாக மானை வேட்டையாடியதாகக் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



சட்டவிரோதமாக மானை வேட்டையாடியதாகக் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

ராஜஸ்தானில் கடந்த 1998-ம் ஆண்டு செப்டம்பரில் ''ஹம் சாத் ஹம் சாத் ஹயெ்ன்'' என்ற இந்தி படப்பிடிப்பு நடந்தது. அப்போது, பகாவாத் வனப்பகுதியில்,சிங்காரா, பிளாக்பெக் போன்ற அரியவகை மான்களை வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், சயீப் அலிகான், நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் உள்ளிட்டோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு சல்மான்கான் உள்ளிட்ட 7 பேருக்கு ஜோத்பூர் கிளை நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம், சல்மான்கானை விடுதலை செய்தது. ஆனால், ராஜஸ்தான் அரசு சல்மான்கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு ஜோத்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. கடந்த 20 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கில், மார்ச் 28-ம் தேதி விசாரணை நிறைவடைந்தன. வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேவ்குமார் காத்ரி ஒத்தி வைத்தார்.

இந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சல்மான்கான் குற்றவாளி என தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து, சில மணிநேரத்திற்குப் பின்னர் சல்மானுக்கான தண்டனை விபரங்களை நீதிபதி அறிவித்தார். 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டது. இதனை அடுத்து, அவர் உடனடியாக சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...