கோவையில் மது போதையில் போராட்டம்: நேற்று அ.தி.மு.க..! இன்று தி.மு.க..!

கோவை: கோவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைதான தி.மு.க.வினர், மது வேண்டி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

கோவை: கோவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைதான தி.மு.க.வினர், மது வேண்டி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டங்கள் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக, தி.மு.க. சார்பில் கோவை கணபதி பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பாய், தலையணையுடன் குடியேறும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கைதாகி அருகில் இருந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தனர். அப்போது, வெளியிலிருந்து மது வாங்கிவிட்டு மண்டபத்திற்குள் நுழைந்த வாகனத்தை போலீசார் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதனால், கொதித்துப் போன தி.மு.க.வினர் போலீசாருடன் பயங்கரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

"ஒரு சில மண்டபத்தில் மதுவுடன், பிரியாணி் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் எங்களுக்கு மட்டும் ஏன் மறுக்கிறீர்கள்?" என்று தி.மு.க-வை சேர்ந்த ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.



"போராட்டங்கள் முடிந்து கைதாவதும், மது குடிப்பதும் சர்வ சாதாரணம்" என அங்குள்ள மற்ற தி.மு.க-வினர் சத்தமிடுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. 



இறுதியாக, மண்டபத்திற்கு வரும் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், வாக்குவாதத்தில் ஈடுபடும் தி.மு.க-வினரை சமாதானம் செய்து மதுவை உள்ளே கொண்டு வர அனுமதிப்பதாகக் கூறுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் நேற்று முன்தினம் கோவையில் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தின் இடையே அக்கட்சி தொண்டர்கள் மதுபானம் குடிக்க படையெடுத்த நிலையில், இன்று தி.மு.க தொண்டர்கள் மதுபானத்திற்காக சண்டையிடும் காட்சிகள், உணர்வுப்பூர்வமாக போராட்டம் நடத்தியவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...