பணிகளைச் சிறப்பாக மேற்கொண்ட 40 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டு

கோவை : கோவை மாநகராட்சியில் வரிவசூல் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட 40 பேருக்கு, மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கிப் பாராட்டினார்.

கோவை : கோவை மாநகராட்சியில் வரிவசூல் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட 40 பேருக்கு, மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கிப் பாராட்டினார். 



கோவை மாநகராட்சி அலுவலக பிரதான கூட்டரங்கில் நிகழ்ச்சியில், உதவி ஆணையாளர்கள் டி.ஆர்.ரவி (தெற்கு மண்டலம்), வி.சரவணன் (வடக்கு மண்டலம்), உதவி வருவாய் அலுவலர்கள் எம்.கார்த்திகேயன் (கிழக்கு மண்டலம்), எஸ்.மதுசூதனன் (மேற்கு மண்டலம்), டி.தமிழ்வேந்தன் (தெற்கு மண்டலம்), ஆர்.காளம்மாள் (வடக்கு மண்டலம்), எம்.எம்.கனகராஜ் (மத்திய மண்டலம்) மற்றும் சிறப்பு வரி ஆய்வாளர்கள் 5 பேருக்கும், உதவியாளர்கள் 10 பேருக்கும், இளநிலை உதவியாளர்கள் 6 பேருக்கும், வரிவசூலர் 4 பேருக்கும், பதிவுறுஎழுத்தர் 8 பேருக்கும் ஆக மொத்தம் 40 பேருக்கு சிறந்த வரிவசூல் செய்தமைக்காக பாராட்டு சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் வழங்கிப் பாராட்டினார். 

கோவை மாநகராட்சி 2017-18-ம் நிதியாண்டின் சொத்துவரி சராசரியாக 95 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், கிழக்கு மண்டலம் மற்றும் வடக்கு மண்டலத்தில் 96 சதவீதமும், மேற்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலத்தில் 95 சதவீதமும் மற்றும் தெற்கு மண்டலத்தில் 90 சதவீதமும் சொத்துவரி வசூலிக்கப்பட்டுள்ளது. மண்டல வாரியாக சிறப்பாக சொத்துவரி வசூல் பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையாளர்கள் கே.ரவிக்குமார், செந்தில்குமார் ரத்தினம், ஜெ.ரவிக்குமார், அண்ணாதுரை, குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...