4 நாட்கள் நடக்கும் மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ் பயிற்சி பட்டறை இன்று தொடக்கம்

கோவை : கோவை சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி கல்லூரியில், மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ் பயிற்சி பட்டறை இன்று தொடங்கியது.

கோவை : கோவை சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி கல்லூரியில், மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ் பயிற்சி பட்டறை இன்று தொடங்கியது. 



சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி கல்லூரியும், தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையும் இணைந்து ஜவுளி தொழில்நுட்பத் துறைக்கும், ஜவுளி தொழில் முனைவோர்க்கும் உதவ பல்வேறு தொழில்நுட்ப உட்பிரிவுகளில் ஜவுளி பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடக்கவிழா கடந்த மாதம் 10-ம் தேதி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தொழில்நுட்ப ஜவுளித்துறையின் ஒரு உட்பிரிவான மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ் பயிற்சி பட்டறை இன்று தொடங்கியது. 8-ம் தேதி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 80 பேர் பங்கேற்றனர். 



பட்டறையின் முதல் நாள் துறைசார் வல்லுநர்களின் விரிவுரைக்காக ஒதுக்கப்பட்டது. மேலும், மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ் பயிற்சி பட்டறையில் தயாரிப்பு முறை, தொழில்நுட்பம், இயந்திரங்கள், தரநிலைகள், சந்தைத் தேவைகள், சந்தைப்படுத்துதல் முதலிய தலைப்புகளில் பங்கேற்பாளர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும்.  மேலும், புதிய பொருட்கள் உற்பத்தி, SWOT ஆராய்ச்சி புதிய வியாபாரத்தில் நுழைவதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...