10 நாட்கள் மட்டுமே நடக்கும் உதகை குதிரைப் பந்தயம் : குதிரைப் பந்தய பிரியர்கள் ஏமாற்றம்

நீலகிரி: உதகையில் வரும் மே 12-ம் தேதி தொடங்கவிருக்கும் குதிரைப்பந்தயம் வெறும் 10 நாட்களே நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால், குதிரைப் பந்தய பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

நீலகிரி: உதகையில் வரும் மே 12-ம் தேதி தொடங்கவிருக்கும் குதிரைப்பந்தயம் வெறும் 10 நாட்களே நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால், குதிரைப் பந்தய பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.



உதகையில் பிரசித்தி பெற்ற குதிரை பந்தயமானது ஆண்டுதோறும் ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் வரை நடைபெறுவது வழக்கம். இதனைக் காண அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருவர். எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா இந்தக் குதிரை பந்தய மைதானத்தில் நடந்ததால், இங்கு குதிரைகள் ஓடுதளம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஓடுதளத்தை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. எனவே, இந்த ஆண்டுக்கான குதிரை பந்தயம், தாமதமாக மே 12-ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆண்டுதோறும் 28 நாட்கள் நடைபெறும் குதிரை பந்தயம், இந்த ஆண்டு மே 12-ம் தேதி முதல் ஜுன் 14-ம் தேதி வரை உள்ள சனி மற்றும் ஞாயிறு தினங்கள் என மொத்தம் வெறும் 10 நாட்கள் மட்டுமே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பந்தயத்தில் பங்கேற்க உள்ள குதிரைகள் மற்றும் ஜாக்கிகள் ஏப்ரல் 15-ம் தேதி உதகைக்கு வருகை தர உள்ளனர். தேர்வுகள் முடியும் தருவாயில் தொடங்கும் இந்தக் குதிரை பந்தயம் கோடை சீசனின் துவக்க நிகழ்ச்சியாக இருந்து வந்த நிலையில், குதிரை பந்தயம் இந்த ஆண்ட காலதாமதமாக துவங்குகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் குதிரை பந்தய பிரியர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...